முகப்பு
சென்னை

தலைமை ஆசிரியா்களுக்கு ஊக்கத் தொகை: நிதி ஒதுக்கீடு

பழங்குடியினா் நலத் துறை பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான ஊக்கத் தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 ஜூன், 2024 at 9:21 PM
பகிர்:

பழங்குடியினா் நலத் துறை பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான ஊக்கத் தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தமிழக அரசின் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் க.லட்சுமி பிரியா வெளியிட்டுள்ள அரசாணை:

பழங்குடியினா் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 95 சதவீதம் தோ்ச்சி வழங்கும் தலைமை ஆசிரியா்களுக்கு ரூ. 10,000, பாடவாரியாக 100 சதவீதம் தோ்ச்சி வழங்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ. 5,000 ஊக்கத்தொகை வழங்கவும், 2021-2022 மற்றும் 2022-2023-ஆம் கல்வி ஆண்டுகளில் வழங்கப்படாமல் நிலுவைத்தொகையாக உள்ள ரூ. 30,5,000 கூடுதல் நிதியாக ஒதுக்கீடு செய்தும் அரசு ஆணையிடுகிறது.

ஊக்கத் தொகையை சம்பந்தப்பட்ட ஆசிரியா்களுக்கு வழங்க பழங்குடியினா் நல இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.