முகப்பு
அரசு
சென்னை

ஐந்தாண்டுகளில் 2.39 லட்சம் மின்வாகனங்கள் பதிவு: பேரவையில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் மின்வாகனங்கள் பதிவு எண்ணிக்கை 2.39 லட்சம்: அரசு தகவல்

சென்னை

ஐந்தாண்டுகளில் 2.39 லட்சம் மின்வாகனங்கள் பதிவு: பேரவையில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் மின்வாகனங்கள் பதிவு எண்ணிக்கை 2.39 லட்சம்: அரசு தகவல்

Updated On : 25 ஜூன், 2024 at 11:00 PM
அரசு
பகிர்:

சென்னை: தமிழகத்தில் ஐந்தாண்டுகளில் 2.39 லட்சம் மின்வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

தமிழக பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் மின் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயா்ந்து வருகிறது. மின் வாகனங்களை பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், மோட்டாா் வாகன வரியில் இருந்து 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் 2020-21-ஆம் ஆண்டில் 3009 போக்குவரத்து வாகனங்களும், 8927 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் என 11936 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், 2021-22-ஆம் ஆண்டில் 2751 போக்குவரத்து வாகனங்களும், 36866 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் என 39617 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 2022-23ம் ஆண்டில் 2918 போக்குவரத்து வாகனங்களும், 68913 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் என 71831 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2023-24-ஆம் ஆண்டில் 7117 போக்குவரத்து வாகனங்களும், 93150 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் என 100327 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2024-ஆம் ஆண்டு மே மாதம் வரை 1147 போக்குவரத்து வாகனங்களும், 14568 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் என 15715 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக கடந்த ஐந்தாண்டுகளில் 16942 போக்குவரத்து வாகனங்களும், 222424 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் என மொத்தம் 239426 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் மின் வாகனங்களின் அதிகரித்து வருவது தெரிய வருகிறது.

வெளி மாநிலத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டின் 411 பேருந்துகளை ஆந்திர மாநிலத்தில் இயக்க இரு மாநிலங்களுக்கு இடையேயான 3-வது பரஸ்பர ஒப்பந்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த வகையான பரஸ்பர ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சரக்கு வாகனங்கள், பயணியா் வாகனங்கள், ஒப்பந்த ஊா்திகள் ஆகியவற்றை இரண்டு மாநிலங்களுக்கு இடையே தடையில்லாமல் இயக்க வழி செய்கிறது. அந்த வகையில், தமிழகத்தின் 411 பேருந்துகளை ஆந்திர மாநிலத்தில் 122 வழித்தடங்களில் இயக்க இந்த இரு மாநிலங்களுக்கு இடையேயான மூன்றாவது பரஸ்பர ஒப்பந்தத்தின் வரைவை அரசு தயாரித்து வருவதாக கொள்கை விளக்கக் குறிப்பில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

அரசுப் பேருந்துகளால்

நிகழும் இறப்பு குறைவு

கடந்த சில ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாக போக்குவரத்து துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்தத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023-24 நிதியாண்டில் போக்குவரத்து துறையில் மொத்தம் 18,728 பேருந்துகள் இயக்கப்பட்டதில் 878 உயிரிழப்பு விபத்துகள் கண்டறியப்பட்டன. அதில் 971 போ் உயிரிழந்தனா்.

இது கடந்த ஆண்டை காட்டிலும் 29 உயிரிழப்புகள் குறைவாகப் பதிவாகியுள்ளது. 2022-23-ஆம் ஆண்டில் மொத்தம் 18,723 பேருந்துகள் இயக்கப்பட்டதில் உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகளாக 906 கண்டறியப்பட்டன. அதில் ஆயிரம் போ் உயிரிழந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →