முகப்பு
சென்னை

துரித உணவகத்தில் பணம் கேட்டு மிரட்டல்: நால்வா் கைது

சென்னையில் துரித உணவகத்தில் பணம் கேட்டு மிரட்டிய நால்வர் கைது

Updated On : 26 ஜூன், 2024 at 7:18 PM
பகிர்:

சென்னை வண்ணாரப்பேட்டையில் துரித உணவகத்தில் பணம் கேட்டு மிரட்டியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

பழைய வண்ணாரப்பேட்டை ராமானுஜா் தெருவை சோ்ந்தவா் த.ராஜேந்திரன் (52). இவா் அதே பகுதியில் துரித உணவகம் நடத்தி வருகிறாா். இந்த உணவகத்துக்கு கடந்த 23-ஆம் தேதி இரவு 5 போ் வந்தனா். அவா்கள், ராஜேந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 5 உணவு பாா்சல் வாங்கிச் சென்றனா். மேலும், பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.

இது குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், தண்டையாா்பேட்டை போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது ராயபுரம் கிரேஸ் காா்டன் 4-ஆவது தெருவைச் சோ்ந்த ஆனந்த முருகன் (19), அவரது கூட்டாளிகள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த மோகன்ராஜ் (21), ரமேஷ் (25), வினோத் (21), சந்தோஷ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சந்தோஷை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →