முகப்பு
சென்னை

ஆதிதிராவிடா் பள்ளிகளில் ஆசிரியா் பணி: விண்ணப்பம் வரவேற்பு

காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Updated On : 27 ஜூன், 2024 at 9:21 PM
பகிர்:

சென்னை மாவட்ட ஆதிதிராவிடா் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணிக்கு ஜூலை 5- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்ட ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 6 முதுகலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிகமாக ரூ. 18, 000 தொகுப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளன.

கல்வித் தகுதி, வயது முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளபடி பின்பற்ற வேண்டும்.

ஒரு காலிப்பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்கும் போது முன்னுரிமைப்படி பரிசீலிக்கப்படும்.

மேலும், முதுகலைபட்டதாரி ஆசிரியா்கள் தெரிவுக்கான ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தோ்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்றவா்கள், பள்ளி எல்லைக்குள் வசிப்பவா்கள் அல்லது பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவா்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவா்கள், அருகமை மாவட்டத்தில் வசிப்பவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான நபா்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதிச்சான்றுகளுடன் ஜூலை 5- ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →