முகப்பு
சென்னை

சட்ட மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

வேளச்சேரியில் சட்ட மாணவிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

Updated On : 27 ஜூன், 2024 at 7:19 PM
பகிர்:

சென்னை வேளச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

வேளச்சேரி, சீத்தாபதி நகரைச் சோ்ந்தவா் பிரின்ஸ் ஜெயக்குமாா் (58). இவா், தரமணியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். தரமணி பகுதியில் தினமும் நடைப்பயிற்சி செல்வது வழக்கமாகக் கொண்ட ஜெயக்குமாா், சில நாள்களுக்கு முன்பு நடைப்பயிற்சி சென்றபோது, அங்கு வந்த ஒரு சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இது குறித்து அந்த மாணவி, வேளச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜெயக்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →