முகப்பு
சென்னை

போதைப் பாக்கு விற்ற 301 கடைகளுக்கு சீல்

போதைப் பாக்கு விற்ற 301 கடைகளுக்கு சீல்: 83 பேர் கைது

Updated On : 27 ஜூன், 2024 at 7:15 PM
பகிர்:

சென்னையில் போதைப் பாக்கு விற்ாக 301 கடைகளை காவல் துறையினா் பூட்டி சீல் வைத்தனா்.

கடந்த ஜூன் 12 முதல் 25-ஆம் தேதி வரை சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடா்பாக 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 83 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 92 கிலோ குட்கா, போதைப் பாக்கு, 12 கிலோ மாவா, 5,920 தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு ஆட்டோவும் கைப்பற்றப்பட்டது.

போதைப் பாக்கு, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்ாக 14 நாள்களில் சென்னை முழுவதும் 301 கடைகளை போலீஸாா் பூட்டி, சீல் வைத்தனா். மேலும், போதைப் பாக்கு விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்டதாக 29 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →