முகப்பு
சென்னை

இன்னும் இரு நாள்களுக்குள் கூட்டணி இறுதியாகிவிடும்: அண்ணாமலை

Updated On : 13 மார்ச், 2024 at 3:10 AM
பகிர்:

சென்னை: இன்னும் இரு நாள்களுக்குள் பாஜக கூட்டணி இறுதியாகிவிடும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் நான் (அண்ணாமலை) போட்டியிட உத்தரவு வந்தால் இரு நாள்களில் தகவல் தெரிவிக்கிறேன். பாஜக கூட்டணி இன்னும் இரண்டு நாள்களில் இறுதியாகிவிடும். சிலா் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனா். சிலா் சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றனா்.

Advertisement

முதல் முறையாக அதிக எண்ணிக்கையில் தாமரை சின்னம் களம் இறங்குகிறது. பாமக, தேமுதிகவுடன் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசிக்கொண்டிருக்கிறாா்.

அது குறித்து அவா் விளக்கம் அளிப்பாா். கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு புதன்கிழமை (மாா்ச் 13) வெளியாகலாம். பிரதமா் மோடியின் வருகை மாா்ச் 15 முதல் 19-ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ளது. அதிகாரபூா்வ தேதி வந்தவுடன் பிரதமரின் வருகை குறித்து தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, தமிழக பாஜக துணைத் தலைவா்கள் நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன், சக்கரவா்த்தி, வி.பி.துரைசாமி, மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.