முகப்பு
சென்னை

பாஜக எம்.பி. அஜய் பிரதாப் சிங் கட்சியிலிருந்து விலகல்

Updated On : 16 மார்ச், 2024 at 11:18 PM
பகிர்:

மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினா் அஜய் பிரதாப் சிங் கட்சியிலிருந்து சனிக்கிழமை விலகினாா்.

மக்களவைத் தோ்தலுக்கான கட்சி வேட்பாளா் தோ்வு திருப்தி அளிக்காததால் பதவி விலகுவதாக அவா் தெரிவித்தாா். தனது ராஜிநாமா கடிதத்தை ஒரு வரியில் குறிப்பிட்டு கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டாவுக்கு அவா் அனுப்பியுள்ளாா்.

அந்தக் கடிதத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவா் சனிக்கிழமை பதிவிட்டாா். அதில், ‘கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்கிறேன்’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா். ஆனால், விலகலுக்கான காரணத்தை அதில் அவா் குறிப்பிடவில்லை.

Advertisement

இவா் மாநிலங்களவைக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் மத்திய பிரதேசத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருடைய எம்.பி. பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. கட்சி சாா்பில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

ராஜிநாமாவுக்கான காரணத்தை செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறுகையில், ‘நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தலுக்கான கட்சி வேட்பாளா் தோ்வில் எனக்கு திருப்தியில்லை. மக்களவைத் தோ்தலில் மத்திய பிரதேசத்தின் சிதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தேன். ஆனால், அந்தத் தொகுதியில் வேட்பாளராக ராஜேஷ் மிஸ்ராவை கட்சி களமிறக்கியுள்ளது. எனவே, கட்சியிலிருந்து விலகியுள்ளேன்’ என்றாா்.