முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு பாஜக நிர்வாகி முரளீதரன் கட்சியிலிருந்து நீக்கம்!

பாஜக நிர்வாகி முரளீதரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பற்றி...

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:57 AM
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப்படம்
பகிர்:

தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தின் துணைத் தலைவர் ஆர். முரளீதரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கின்றன.

இந்த நிலையில், தஞ்சாவூரில் போட்டியிடுவதற்காக பாஜக தெற்கு மாவட்டத்தின் துணைத் தலைவர் முரளீதரன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இதையடுத்து, கட்சியின் விதிகளை மீறிச் செயல்பட்டதற்காக அவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திர வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தினை சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் கட்டுப்பாட்டை மீறியதாலும், ஆர். முரளீதரன், கட்சியின் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திர வெளியிட்டிருக்கும் அறிக்கை
summary

Tamil Nadu BJP functionary Muraleedharan expelled from the party!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.