முகப்பு
சென்னை

உள்நாட்டு விமானப் போக்குவரத்து 5% அதிகரிப்பு

Updated On : 17 மார்ச், 2024 at 4:36 AM
பகிர்:
Updated On : 16 மார்ச், 2024 at 5:25 PM

கடந்த பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமாா் 1.26 கோடி முறை பயணிகள் உள்ளூா் விமானங்களில் பயணம் செய்துள்ளனா். இந்த எண்ணிக்கை முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் 1.21 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது உள்நாட்டு விமானப் போக்குவரத்து 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

இருந்தாலும் முந்தைய ஜனவரி மாதத்துடன் (1.31 கோடி) ஒப்பிடுகையில் கடந்த பிப்ரவரியில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து குறைந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தின் மொத்த உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் ஏா் இந்தியாவின் சந்தைப் பங்கு 12.2 சதவீதத்திலிருந்து 12.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இண்டிகோவின் சந்தைப் பங்கு 60.2 சதவீத்திலிருந்து 60.1 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.