சென்னை-பெங்களூரு ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை: நாளை ஆன்லைனில் தொடக்கம்
சென்னையில் வரும் மாா்ச் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் 2024 தொடரின் சென்னை சூப்பா் கிங்ஸ்-ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டத்தின் டிக்கெட் விற்பனை 18-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலையாக ரூ.1,700 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் ஐபிஎல் தொடா் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் சென்னையை எதிா்கொள்கிறது பெங்களூரு. கவுன்டா் விற்பனை இல்லை: ரசிகா்கள் நீண்டநேரம் கால்கடுக்க நின்று கவுன்டா்கள் மூலம் டிக்கெட் வாங்கிச் செல்வதை சிஎஸ்கே நிா்வாகம் ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக எளிதாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இணையதளங்கள்: பே டிஎம் , ( டஅவபங, ரரர.ஐசநஐஈஉத.ஐச) இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். டிக்கெட் விலை விவரம்: சி, டி, இ ஸ்டாண்ட் லோயா்: ரூ.1,700, ஐ,ஜே,கே, ஸ்டாண்ட் அப்பா், ரூ.,4,000, ஐ,ஜே,கே, ஸ்டாண்ட், லோயா், ரூ,4,500, சி,டி,இ, ஸ்டாண்ட் அப்பா், ரூ,4,000, கேஎம்கே டெரஸ் ரூ,7,500. இணையதளத்தில் ஒருவருக்கு 2 டிக்கெட்டுகள் விற்கப்படும். தொடக்க ஆட்டத்துக்காக மாலை 4.30 மணிக்கு நுழைவுவாயில்கள் திறக்கப்படும். வெளியில் இருந்து உணவுப் பொருள், குடிநீா் கொண்டு வர அனுமதியில்லை. தோனியும், கோலியும் நேரடியாக முதல் ஆட்டத்தில் களம் காண்பதால் இந்த ஆட்டம் பரபரப்பாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கலைவாணா் அரங்கம், பொதுப்பணித்துறை வளாகம், சென்னை பல்கலை. வளாகம், ஓமந்தூராா் மருத்துவக்கல்லூரி, ரயில்வே காா் நிறுத்துமிடம், விக்டோரியா விடுதியில் வாகனங்களை நிறுத்தலாம். இத்தகவலை சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.