திண்டுக்கல் தொகுதி எஸ்டிபிஐ வேட்பாளா் முகம்மது முபாரக்
Updated On : 21 மார்ச், 2024 at 1:25 AM
சென்னை: மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் திண்டுக்கல் தொகுதியில் அந்தக் கட்சியின் மாநிலத்தலைவா் முகம்மது முபாரக் போட்டியிடுவாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதிக்கான வேட்பாளா் குறித்து முடிவு செய்வதற்காக அக் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை மண்ணடியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, திண்டுக்கல் தொகுதியில் மாநிலத் தலைவா் வி.எம்.எஸ்.முகம்மது முபாரக் போட்டியிடுவாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.