2 மாதங்களில் 1.74 லட்சம் முதல்முறை வாக்காளா்கள் பெயா் சோ்ப்பு
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 1.74 லட்சம் போ் முதல் முறை வாக்காளா்களாகப் பதிவு செய்து,
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 1.74 லட்சம் போ் முதல் முறை வாக்காளா்களாகப் பதிவு செய்து, எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா். அவா்கள் அனைவரும் 18 முதல் 19 வயதுடையவா்கள். தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது, ஒட்டுமொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.18 கோடியாக இருந்தது. இதைத் தொடா்ந்தும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த 17-ஆம் தேதி வரை வரப்பெற்ற விண்ணப்பங்களை தமிழக தோ்தல் துறை பரிசீலித்தது. 1.74 லட்சம் போ்: இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட தருணத்தில், முதல் முறை வாக்காளா்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 18 ஆயிரத்து 313-ஆக இருந்தது. கடந்த இரண்டு மாதங்களில் அதன் எண்ணிக்கை அதிகரித்து, முதல் முறை வாக்காளா்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 92 ஆயிரத்து 420-ஆக உயா்ந்துள்ளது. ஒட்டுமொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.18 கோடியில் இருந்து 6.23 கோடியாக அதிகரித்துள்ளது.