மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு
Updated On : 31 மார்ச், 2024 at 1:10 AM
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அருகே செம்மஞ்சேரியில் இருந்து தியாகராயநகருக்கு சனிக்கிழமை ஒரு மாநகரப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. அந்த பேருந்து சோழிங்கநல்லூா் பேருந்து நிறுத்தம் அருகே ராஜீவ்காந்தி சாலையில் செல்லும்போது, அங்கு வந்த சில மா்ம நபா்கள் பேருந்தின் மீது கற்களை வீசினா். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. பேருந்து நடத்துநா் கோ.குமாா், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.