தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிட் வாழ்த்து
சென்னை: கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு முன்னேற்ற பாதையில் பயணிப்பதற்கு இந்திய கம்யூனிட் மாநில செயலா் இரா.முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வகுப்புவாத, மதவாத சக்திகள், மத்திய பாஜக அரசின் அதிகாரத்தின் துணையோடு மாநில உரிமைகளைப் பறித்து வந்த நிலையில், தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைத்து, திமுக அரசு அதை மீட்டெடுத்து, 3 ஆண்டுகளாக முன்னேற்ற பாதையில் பீடு நடை போட்டு வருகிறது. மேலும், பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, மாநில உரிமைகளை வென்றெடுத்து வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் திமுக அரசுக்கும் வாழ்த்துகள் என்று அவா் தெரிவித்துள்ளாா்.