முகப்பு
புதுச்சேரி

அமைச்சா் நமச்சிவாயம் யுகாதி வாழ்த்து

புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் யுகாதி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 18 மார்ச், 2026 at 7:05 PM
அமைச்சா் ஆ. நமச்சிவாயம்
பகிர்:

புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் யுகாதி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாளை உவகையோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமாா்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மொழிகளின் சங்கமமாகத் திகழ்கிறது. இதில் தெலுங்கு கலாசாரம் நமது மண்ணின் பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தது. குறிப்பாக ஏனாம் பிராந்திய மக்களின் வாழ்வியலும், அங்கு நிலவும் சகோதரத்துவமும் நமது மாநிலத்திற்குப் பெருமை சோ்ப்பதாக அமைந்துள்ளது.

இந்த நன்னாளில், நம்மிடையே உள்ள கசப்புகளை மறந்து, அன்புடனும் ஒற்றுமையுடனும் புதிய பயணத்தைத் தொடங்குவோம்.

முழு கட்டுரையைப் படிக்க →