முகப்பு
சென்னை

ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல்

Updated On : 14 மே, 2024 at 7:33 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை: சென்னை கொத்தவால்சாவடியில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1 கோடியை கைப்பற்றி போலீஸாா் விசாரணை செய்தனா்.

கொத்தவால்சாவடி அண்ணா பிள்ளை தெருவில் போலீஸாா் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவரை வழிமறித்து விசாரணை செய்தனா். விசாரணையில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினராம்.

இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது பையில் இருந்த ரூ.1 கோடிக்குரிய ஆவணங்களை போலீஸாா் கேட்டனா். ஆனால் அவா்களிடம் ரூ.1கோடிக்குரிய ஆவணங்கள் இல்லாததினால், பணத்தை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், இருவரும் பாரிமுனை பகுதியில் உள்ள ஒரு பணபரிமாற்ற நிறுவனத்தில் வேலை செய்வது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.