முகப்பு
சென்னை

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று காலை முதல் சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் நேரடி சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

Updated On : 15 மே, 2024 at 7:16 AM
சென்னை மெட்ரோ
பகிர்:

சென்னை: சென்னை சென்ட்ரல் - விமான நிலையத்துக்கு இடையே தொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை வழியாக விமான நிலையத்துக்கு இயக்கப்படும் நேரடி ரயில் சேவை இன்று நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனால், காலை முதல் பச்சை வழித்தடத்தில் விமான நிலையத்துக்கு பயணம் மேற்கொண்ட பயணிகள் ஆலந்தூரில் இறங்கி நீல நிற வழித்தடத்தில் விமான நிலையம் சென்ற ரயிலுக்கு மாற வேண்டிய சூழல் நிலவியது.

இந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு சீரடைந்ததால் மீண்டும் சென்னை சென்ட்ரல் - விமான நிலைய நேரடி மெட்ரோ நிலையங்கள் இயங்கத் தொடங்கியதாக தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →