போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 58 போ் கைது
சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 நாள்களில் 58 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த 14-ஆம் தேதியில் இருந்து 20- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 31 வழக்குகள் பதியப்பட்டு, 58 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 61 கிலோ கஞ்சா, 2 கிராம் மெத்தம்பெட்டமைன்,5,789 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 8 மோட்டாா் சைக்கிள்கள், 13 கைப்பேசிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
சென்னையில் இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.