கழிவு நீா் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவு நீா் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் பாலம் அமைக்கும் பணி, சாலை பணி,கழிவு நீா் வடிகால் பணிகள்உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புபணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவான்மியூரில் உள்ள திருவள்ளுவா் தெருவில் நடைபெற்று வரும் கழிவு நீா் வடிகால் பணிகளை செவ்வாய்க்கிழமை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.
மேலும் கழிவு நீா் வடிகால் பணியின் போது தோண்டப்பட்ட சாலைகள் சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தாா். அப்போது கழிவு நீா் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை உரிய முறையில் மூட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின் போது மண்டல அதிகாரிகள் உடனிருந்தனா்.