கோப்புப்படம் 
சென்னை

பனகல் பூங்கா பகுதியில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

பனகல் பூங்கா பகுதியில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பது பற்றி..

Din

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக சென்னை பனகல் பூங்கா பகுதியில் திங்கள்கிழமை (நவ.25) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகள் பனகல் பூங்கா பகுதியில் நடைபெற்று வருகின்றன. பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு, வெளியேறும் அமைப்புக்கு உண்டான கட்டுமான பணிகள் வெங்கடநாராயண சாலை, சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள ஜே.ஒய்.எம். திருமண மண்டபம் அருகே மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் காரணமாக திங்கள்கிழமை (நவ.25) முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை ஒரு வாரம் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.

அதன்படி, தியாகராய சாலையில் இருந்து வாகனங்கள் சிவஞானம் தெரு வழியாக வெங்கடநாராயணா சாலைக்கு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு செல்ல வேண்டிய வாகனங்கள், தியாகராய சாலை மற்றும் தணிகாச்சலம் சாலை வழியாகச் சென்று வெங்கடநாராயணா சாலையை அடைந்து, தங்கள் இலக்கை அடையலாம்.

அந்தப் பகுதி மக்களின் வசதிக்காக வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம். திருமண மண்டபம் வரையில் இரு திசைகளிலும் செல்ல அனுமதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT