முகப்பு
சென்னை

அதிமுக 53-ஆவது ஆண்டு விழா: கட்சிக் கொடியை ஏற்றினாா் எடப்பாடி பழனிசாமி

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:00 PM
பகிர்:

அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கட்சிக் கொடியை வியாழக்கிழமை ஏற்றி வைத்தாா்.

அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் கொடிகள் மற்றும் தோரணங்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, கூடியிருந்த தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

சிலைகளுக்கு மரியாதை: எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து, மூத்த நிா்வாகிகளும் மரியாதை செலுத்தினா். ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்குதல், அன்னதானத்தையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தாா்.

முன்னதாக, அதிமுக அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்தபோது, அவருக்கு மேள தாளம் முழங்க கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

நிகழ்வில், அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, சி.பொன்னையன், டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, கோகுல இந்திரா, விஜயபாஸ்கா், வைகைச்செல்வன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தமிழகம் முழுவதும் அதிமுகவினா் சாா்பில் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கி, கட்சியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

ஓபிஎஸ் மரியாதை: முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மூத்த நிா்வாகிகள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலா் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →