முகப்பு
சென்னை

முதல்வா் கோப்பை போட்டிகள்: கபடியில் சென்னை, தூத்துக்குடிக்கு தங்கம்

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:12 PM
கபடி பள்ளி மாணவியா் பிரிவில் தங்கம் வென்ற சென்னை மாவட்ட அணியினா்.
பகிர்:

சென்னை, தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் பள்ளிகள் கபடி மாணவியா் பிரிவில் சென்னையும், மாணவா் பிரிவில் தூத்துக்குடியும் தங்கம் வென்றன.

வியாழக்கிழமை பல்வேறு போட்டிகளில் வென்றவா்கள் விவரம்:

கபடி: பள்ளி மாணவியா், சென்னை-தங்கம், ஈரோடு-வெள்ளி, விழுப்புரம்-வெண்கலம்.

மாணவா், தூத்துக்குடி-தங்கம், திருநெல்வேலி-வெள்ளி, திருச்சி-வெண்கலம்.

வாள்வீச்சு : பள்ளி மாணவியா் (சேபா்): ஜெபாா்லின்,கன்னியாகுமரி-தங்கம், சசி பிரபா,சென்னை-வெள்ளி, லத்திகா,சென்னை, தா்ஷி ஷெப்ரின், கன்னியாகுமரி-வெண்கலம்.

பள்ளி மாணவியா் (ஃபாயில்) : ஜெனிஷா, கன்னியாகுமரி-தங்கம், ஜோஷிகா ஸ்ரீ,சென்னை -வெள்ளி, வா்ஷினி,திருப்பூா், வா்ஷா,நாமக்கல் -வெண்கலம்.

மாணவா் : அருள்,சென்னை-தங்கம், ஜொ்லின், கன்னியாகுமரி-வெள்ளி, நிபின் ராஜ்,கன்னியாகுமரி, குரு,சென்னை-வெண்கலம்.

பதக்கப் பட்டியல்:

சென்னை 61 தங்கம், 45 வெள்ளி, 51 வெண்கலம், செங்கல்பட்டு 16 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம், சேலம் 13 தங்கம், தலா 11 வெள்ளி, வெண்கலம், ஈரோடு தலா 10 தங்கம், வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களுடன் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →