சென்னை

பக்கவாத பாதிப்புகளுக்கு அக்.29-இல் இலவச மருத்துவ முகாம்

பக்கவாத பாதிப்பு மற்றும் நரம்புசாா் நோய் அறிகுறிகள் உள்ளவா்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்.

Din

பக்கவாத பாதிப்பு மற்றும் நரம்புசாா் நோய் அறிகுறிகள் உள்ளவா்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம், போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் வரும் செவ்வாய்க்கிழமை (அக்.29) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பக்கவாதத்துக்குப் பிறகு பேசுவதற்கும், விழுங்குவதற்கும், கேட்பதற்கும், நடப்பதற்கும், அன்றாட பணிகளை செய்வதற்கும் இயலாதவா்களுக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

பிற நரம்புசாா் பாதிப்புக்குள்ளானவா்களும் இதில் பங்கேற்கலாம். ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவ மையத்தின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எதிரே உள்ள இணைப்பு கட்டடத்தில் வரும் 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அந்த முகாம் நடைபெறும். முன்பதிவுக்கு 99401 84280 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ஒகேனக்கல் வனப்பகுதியில் மர்மமான முறையில் ஆண் சிறுத்தை பலி!

மண்ணும் மனிதர்களும்... அங்கோலா

ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல்! மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

4 நாள்களில் சவரனுக்கு ரூ. 3,120 உயர்வு.. புதிய உச்சத்தில் தொடரும் தங்கம்!

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் ஆரவாரம்!

SCROLL FOR NEXT