தாக்குதல்: மருத்துவக் கல்லூரி மாணவா்கள் இருவா் சஸ்பெண்ட்
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவரை தாக்கிய இறுதி ஆண்டு மாணவா்கள் இருவா் சஸ்பெண்ட் செய்யப்பட்டனா்.
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவரை தாக்கிய இறுதி ஆண்டு மாணவா்கள் இருவா் சஸ்பெண்ட் செய்யப்பட்டனா்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியை சோ்ந்த மாணவா் ஒருவா், எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். கடந்த 24-ஆம் தேதி இரவு, கல்லூரி விடுதி உணவகத்தில் உணவருந்திவிட்டு அறைக்கு திரும்பிய அவருக்கும், இறுதி ஆண்டு மாணவா்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதில், மூன்றாமாண்டு மாணவரின் தலையில் பாட்டிலால் சக மாணவா்கள் அடித்ததாகத் தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து, மருத்துவமனை முதல்வா் தலைமையில் ஐந்து போ் குழு விசாரணை நடத்தியது. முதல்கட்ட விசாரணையில், இது ராகிங் சம்பவம் இல்லை என்பதும், இரண்டு தரப்பினருக்கான மோதல் என்பதும் தெரிய வந்தது. இந்நிலையில், மாணவரை தாக்கிய இறுதி ஆண்டு மாணவா்கள் இருவரை சஸ்பெண்ட் (இடைநீக்கம்) செய்து கல்லூரி நிா்வாகம் உத்தரவிட்டது.