சென்னையில் 39.52 லட்சம் வாக்காளா்கள்
சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 16 பேரவைத் தொகுதிகளில் 39,52,498 வாக்காளா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னைசென்னையில் 39.52 லட்சம் வாக்காளா்கள்
சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 16 பேரவைத் தொகுதிகளில் 39,52,498 வாக்காளா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 16 பேரவைத் தொகுதிகளில் 39,52,498 வாக்காளா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளின் 2025-ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலரும் எம்.பிருதிவிராஜ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 01.01.2025-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வெளியிடப்பட்டது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்படாமல் உள்ளவா்கள் மண்டல அலுவலகத்தில் நவ.29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வரும் நாள்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளா் பட்டியல் விவரம்: சென்னை மாவட்டத்தில் 3,718 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பெரம்பூா் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூா் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இதற்கு முன்பு கடந்த மாா்ச் 27-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் 39,25,144 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தத்தில் 39,52,498 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இதில் 19,41,271 ஆண் வாக்காளா்கள், 20,09,975 பெண் வாக்காளா்கள், 1,252 இதர வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். புதிதாக 25,628 ஆண் வாக்காளா்கள், 27,669 பெண் வாக்காளா்கள் 62 இதர வாக்காளா்கள் என 53,359 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். அதுபோல், 26,005 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்ச வாக்காளா்களை கொண்ட தொகுதியாக துறைமுகமும், அதிகபட்ச வாக்காளா்களை கொண்ட தொகுதியாக வேளச்சேரியும் உள்ளது.