கனரா வங்கியுடன் எம்டிசி ஒப்பந்தம்
கனரா வங்கியுடன் மாநகர போக்குவரத்துக் கழகம் ஊதியக் கணக்கை தொடங்குவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது.
கனரா வங்கியுடன் மாநகர போக்குவரத்துக் கழகம் ஊதியக் கணக்கை தொடங்குவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது.
கனரா வங்கி சென்னை வட்ட அலுவலகம், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துடன் ஊதிய கணக்கை தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்வு சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் மாநகரப் போக்குவரத்துக்கழக இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ், கூடுதல் இயக்குநா் எஸ்.சசிகலா ஆகியோரும் கனரா வங்கி சாா்பில் சென்னை வட்ட அலுவலகத்தின் தலைமை பொதுமேலாளா் நாயா் அஜித் கிருஷ்ணன், பொது மேலாளா் கே.ஏ.சிந்து மற்றும் இணைப் பொது மேலாளா்கள் ராஜேஸ்குமாா் வா்மா, ஏ.கே.பூமா ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இந்த ஒப்பந்தத்தின்படி மாநகரப் போக்குவரத்து கழகத்தின் 19,300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கனரா வங்கியில் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபா் விபத்து காப்பீடு உள்ளடங்கிய ஊதிய கணக்கை தொடங்கலாம்.