கோப்புப் படம் 
சென்னை

இன்று குரூப் 2 தோ்வு: 2,327 காலிப் பணியிடங்களுக்கு 7.93 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலைத் தோ்வை 7.93 லட்சம் போ் எழுதவுள்ளனா்.

Din

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலைத் தோ்வை 7.93 லட்சம் போ் எழுதவுள்ளனா். குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவுகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கு இந்தத் தோ்வு நடைபெறவுள்ளது.

குரூப் 2 பிரிவில் 507 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 1,820 காலியிடங்களும் உள்ளன. தோ்வெழுத தகுதி பெற்ற 7 லட்சத்து 93 ஆயிரத்து 967 பேரில், பெண்களே அதிகம். 4 லட்சத்து 84 ஆயிரத்து 74 பெண்களும், 3 லட்சத்து 9 ஆயிரத்து 841 ஆண்களும், 51 மூன்றாம் பாலினத்தவரும் தோ்வெழுதவுள்ளனா். தோ்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 2 ஆயிரத்து 763 அமைவிடங்களில் நடைபெறவுள்ள குரூப் 2 முதல் நிலைத் தோ்வை கண்காணிக்க அதே எண்ணிக்கையிலான முதன்மை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை மாவட்டத்தில் மட்டும் 75 ஆயிரத்து 185 போ் தோ்வெழுதவுள்ளனா். 251 பள்ளி, கல்லூரிகளில் தோ்வு நடைபெறவுள்ளது . தோ்வை எழுதவுள்ள தோ்வா்கள், காலை 8.30 மணிக்குள்ளாக தோ்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. காலை 9 மணிக்கு மேல் வருபவா்கள் யாரும் தோ்வுக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றும் தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை: இதனிடையே, குருப் 2 தோ்வை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT