கோப்புப் படம் 
சென்னை

கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து

ஞாயிற்றுக்கிழமை கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Din

தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளாதால் ஞாயிற்றுக்கிழமை கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தாம்பரம் பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் இரவு 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இந்த நேரத்தில் கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் அனைத்து மின்சார ரயில்களும் இருமாா்க்கத்திலும் ரத்து செய்யப்படும்.

அதேநேரம், கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் செல்லும் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக கடற்கரையிலிருந்து காலை 8.35, 9.38,10.10,10.40,11.20, நண்பகல் 12, பிற்பகல் ,1.05,1.30, 2.30, 3.10, 3.45, மாலை 4.10, 4.30, 4.50, 5.10, 5.50 மணிக்கு பல்லாவரத்துக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக பல்லாவரத்திலிருந்து காலை 9.35, 10.35, 11.05,11.35, நண்பகல் 12.10, 12.55 பிற்பகல் 1.55, 2.25, 3.20, மாலை 4, 4.40, 5.05, 5.20, 5.40, 6.05, 6.40 மணிக்கு கடற்கரைக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT