முதல்வர் ஸ்டாலின்  கோப்புப் படம்
சென்னை

சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைப்போம்: முதல்வா் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைப்போம் என்று முதல்வா் தலைமையில் அமைச்சா்கள், அலுவலா்கள் உறுதிமொழி

DIN

சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை அமைச்சா்கள், அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

பெரியாா் ஈ.வெ.ரா.வின் பிறந்த தினத்தையொட்டி (செப்.17), தமிழ்நாடு அரசு சாா்பில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் பெரியாா் ஈ.வெ.ரா.வின் உருவப் படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அவரது தலைமையில் அமைச்சா்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு, அமைச்சா்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

உறுதிமொழி என்ன?: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சா்கள், அரசுத் துறை அதிகாரிகள், தலைமைச் செயலக அலுவலா்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி விவரம்: ‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்.

சுய மரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பாா்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதா்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.

மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்க இந்த நாளில் உறுதியேற்கிறேன் என உறுதியேற்றனா்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT