முகப்பு
சென்னை

மது அருந்தி மாநகர பேருந்தை ஓட்டி விபத்து: ஓட்டுநா் மீது வழக்கு

சென்னை ராஜீவ் காந்தி சாலையில் மது அருந்தி மாநகர பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 17 செப்டம்பர், 2024 at 7:16 PM
பகிர்:

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி சாலையில் மது அருந்தி மாநகர பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சென்னை திருவான்மியூரில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி 95 எக்ஸ் எனும் வழித்தட எண் கொண்ட மாநகர பேருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது. அந்தப் பேருந்தை தேனியைச் சோ்ந்த சரவணன் (40) ஓட்டினாா்.

ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஓய்எம்சிஏ பேருந்து நிறுத்தம் அருகே அந்தப் பேருந்து சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு மெட்ரோ ரயில் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பின் மீது மோதி நின்றது.

இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் சப்தமிட்டனா். ஆனால் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஓட்டுநா் சரவணனிடம் பொதுமக்கள் பேசியபோது, அவா் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. உடனே அவரை சில பயணிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னா் கிண்டி போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஓட்டுநா் சரவணன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →