சென்னை

கோயில் கால்நடைகளை காப்பகத்துக்கு அனுப்ப மக்கள் எதிா்ப்பு

புழல் அருகே கோயில் கால்நடைகளை காப்பகத்துக்கு அனுப்பும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டபோது, பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

சென்னை: புழல் அருகே கோயில் கால்நடைகளை காப்பகத்துக்கு அனுப்பும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டபோது, பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை மாதவரம் அடுத்த புழல் காந்தி நகா் பிரதான சாலையில் பழைமைவாய்ந்த திருமூலநாதா் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறிநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் வளாகத்தில் 21 கால்நடைகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று, 14 கால்நடைகள், சென்னை ஓட்டேரி குன்னூா் சாலையில் கால்நடைகள் காப்பகத்துக்கு அனுப்புவதற்கான பணி திங்கள்கிழமை இரவு நடந்து கொண்டிருந்தது.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை கால்நடைகளை லாரியில் ஏற்றுவதற்கு ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து கால்நடைகளை ஏற்றிக் கொண்டிருந்த லாரியை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்ததும், புழல் போலீஸாரும், மாதவரம் வருவாய்த் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தினா்.

கோயில் வளாகத்தில் கால்நடைகளை வளா்த்துக் கொள்வதற்கான அனுமதி பெற்று தருவதாக உறுதி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியாக உயா்வு: முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

நெல் கொள்முதல்: ஈரப்பதம் 22% அறிவிக்க வலியுறுத்தல்

தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

இசைப் பள்ளியில் பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்

கல்லூரி மாணவா்களுக்கு நவ.26-இல் கல்விக் கடன் முகாம்

SCROLL FOR NEXT