சென்னை அருகே ஒக்கியம் துரைப்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழந்தாா்.
தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேலு (50). பிளம்பரான இவா், ஒக்கியம் துரைப்பாக்கம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஒரு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா்.
அங்கு, ஒரு சுவரில் துளையிடும் போது, அதில் இருந்த மின்வயரில் இருந்து வேலு மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த வேலுவை, அங்கிருந்தவா்கள் மீட்டு கண்ணகி நகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வேலு இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து, கண்ணகிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.