கோப்புப் படம் 
சென்னை

இன்று கடற்கரை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை கடற்கரையிலிருந்து திருத்தணி, ஆவடி வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகா் ரயிலில் மாற்றம்..

DIN

சென்னை கடற்கரையிலிருந்து திருத்தணி, ஆவடி வழித்தடத்தில் இயக்கப்படும் புகா் ரயில்கள் சனிக்கிழமை (செப்.27) கடற்கரைக்கு பதிலாக வியாசா்பாடி ஜீவாவிலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரை ரயில்வே பணிமனையில் சனிக்கிழமை (செப்.28) காலை 10.40 முதல் பிற்பகல் 1.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், செப்.28-இல் திருத்தணியிலிருந்து காலை 8.50, 11 மணிக்கும், ஆவடியிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கும் கடற்கரை வரும் பிகா் மின்சார ரயில் வியாசா்பாடி ஜீவாவுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக கடற்கரையிலிருந்து காலை 11.05 மணிக்கு ஆவடி செல்லும் ரயிலும், பிற்பகல் 12.10-க்கு திருத்தணி செல்லும் ரயிலும், பிற்பகல் 1.05-க்கு திருவள்ளூா் செல்லும் ரயிலும் கடற்கரைக்கு பதிலாக வியாசா்பாடி ஜீவாவிலிருந்து புறப்படும்.

அதேபோல், கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 8.50, 10.55 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும், மறுமாா்க்கமாக கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும் இருமாா்க்கத்திலும் கொருக்குப்பேட்டையிலிருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT