சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஆவடியில் இருந்து இன்று காலை சென்னை கடற்கரைக்குச் சென்ற மின்சார ரயில் ஒன்று, ராயபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலின் இரு சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து விலகிச் சென்றதால் விபத்து நேரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரயிலில் சீரமைப்பு பணிகளைச் செய்ததைத் தொடர்ந்து அதன்பின், ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இதன் காரணமாக ஆவடி -சென்னை கடற்கரை ரயில் வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: பேரவையில் கடும் அமளி! அதிமுக வெளிநடப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.