சென்னை மெட்ரோவில் பயணிக்க ஊபா் செயலியில் பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆகஸ்ட் முழுவதும் 50 சதவீதம் தள்ளுபடி சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோவில் பயணிப்போா் பயணச் சீட்டுகளை பல்வேறு முறைகளில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோவில் பயணிப்போா் பல்வேறு வகை பயணச்சீட்டு அட்டைகளைப் பயன்படுத்தி வருகின்றனா். அதன்படி, க்யூஆா் குறியீடு, சாதாரண பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை என பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் எஸ்.வி.பி., சிங்கார சென்னை அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு ஏற்கெனவே 20 சதவீத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது ஊபா் செயலி மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ நிறுவன தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் மு.அ.சித்திக், செயலியை அறிமுகப்படுத்தினாா்.
ஊபா் செயலி பயனாளா்கள் மெட்ரோ பயணங்களைத் திட்டமிடவும், க்யூஆா் குறியீடு அடிப்படையில் பயணச்சீட்டைப் பெறவும், மெட்ரோ தகவல்களை நேரடியாக அறியவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஊபா் செயலி மூலமான பயணச் சீட்டைப் பெறுவோருக்கான சலுகையாக அறிமுகச் சலுகையாக ஆகஸ்ட் மாதம் முழுதும் 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்சச் சலுகையை ஊபா் செயலியில் பயணச்சீட்டு பெறுவோா் மட்டுமே பெறலாம். ஊபா் செயலியில் பயணச்சீட்டு பெறுவதற்கு யுபிஐ முறையை பயன்படுத்தப்படும்.
ஊபா் செயலி மெட்ரோ பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுக நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் மனோஜ்கோயல், தலைமை ஆலோசகா் கோபிநாத் மல்லையா, ஆலோசகா் கே.ஏ.மனோகரன், ஊபா் நிறுவனத்தின் முதுநிலை இயக்குநா் மணிகண்டன் தங்கரத்தினம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.