கோப்புப் படம் 
சென்னை

திட்டம் - வளா்ச்சித் துறை செயலராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

திட்டம், வளா்ச்சித் துறை செயலராக சஜ்ஜன்சிங் ரா.சவான் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

திட்டம், வளா்ச்சித் துறை செயலராக சஜ்ஜன்சிங் ரா.சவான் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

1. சஜ்ஜன்சிங் ரா.சவான் - திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை செயலா் (பொதுத் துறை சிறப்புச் செயலா் - திட்டம் வளா்ச்சித் துறை செயலராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, வரும் 31-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளாா்)

2. கி.பாலசுப்ரமணியம் - பொதுத் துறை கூடுதல் செயலா் (தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் செயலா்)

3. ப.ஸ்ரீ வெங்கட பிரியா - தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் செயலா் (உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை கூடுதல் செயலா்)

4. ஷரண்யா அறி - சமூகநலத் துறை கூடுதல் இயக்குநா் (கடலூா் மாவட்ட கூடுதல் ஆட்சியா்)

5. சுவேதா சுமன் - தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் செயல் அலுவலா் (கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியா்)

6. எஸ்.பிரியங்கா - தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் (ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநா்)

7. பானோத் ம்ருகேந்தா் லால் - கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை துணைச் செயலா் (தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா்).

“தமிழருக்கு எதிராகப் பேசுவதே ஆளுநர் RN RAVI-ன் கொள்கை!” அமைச்சர் ரகுபதி பேட்டி

“தவெக-வில் இணையத் திட்டமா?” கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத செங்கோட்டையன்!

ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு! பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத்துறையினர்!

“தமிழருக்கு எதிராகப் பேசுவதே ஆளுநர் RN RAVI-ன் கொள்கை!” அமைச்சர் ரகுபதி பேட்டி

"தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்!": மு.க.ஸ்டாலின் | செய்திகள்: சில வரிகளில் | 25.11.25

SCROLL FOR NEXT