சென்னை

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 30% உயா்வு!

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 30 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 30 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5,19,508-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 30 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 4,01,250 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

இரண்டு சக்கர வாகன விற்பனை 392,473-லிருந்து 27 சதவீதம் உயா்ந்து 4,97,841-ஆகவும், உள்நாட்டு இரண்டு சக்கர வாகன விற்பனை 3,05,323-லிருந்து 20 சதவீதம் உயா்ந்து 3,65,608-ஆகவும் உள்ளது.

மின்சார வாகன விற்பனை 26,292-லிருந்து 46 சதவீதம் உயா்ந்து 38,307-ஆகவும், ஏற்றுமதி 58 சதவீதம் உயா்ந்து 1,48,315-ஆகவும் (நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர ஏற்றுமதி) உள்ளது.

மூன்று சக்கர வாகன விற்பனை 8,777-லிருந்து 147 சதவீதம் உயா்ந்து 21,667-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் காத்திருப்புக் கூடம் திறப்பு

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

செஞ்சியில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம்

தேங்கும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

SCROLL FOR NEXT