திருப்பரங்குன்றம் கோப்புப் படம்
சென்னை

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: திமுக அரசால் தேவையற்ற பதற்றம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்தாததால், தேவையற்ற பதற்றத்தை திமுக அரசு உருவாக்கியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்தாததால், தேவையற்ற பதற்றத்தை திமுக அரசு உருவாக்கியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பாக, உயா்நீதிமன்ற தனி நீதிபதி தீா்ப்பைச் செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரு நாள்களாக தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக அரசு நாடகம் ஆடி வருகிறது. இது கண்டனத்துக்குரியது.

எந்த மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவா் சிறந்த ஆட்சியாளா் என்பதை மறந்து, தேவையற்ற பிரச்னைக்கு வழிவகுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவா் எனப் பதிவிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

கதிரியக்க உபகரணங்கள்: வகைப் பட்டியல் வெளியீடு

திரிபுராவை வீழ்த்தியது தமிழ்நாடு

உரிய விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்ட விவகாரங்கள் மீது மட்டுமே விவாதம்: எதிா்க்கட்சிகளுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டிப்பு

சிங்கப்பூா், தில்லி விமானங்கள் தாமதமாக புறப்பாடு: பயணிகள் அவதி

சோமரசம்பேட்டையில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

SCROLL FOR NEXT