சென்னை

கல்லூரி மாணவி கடத்தல் வழக்கு: இளைஞா் கைது

சென்னை நொளம்பூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை நொளம்பூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மேற்கு முகப்பேரைச் சோ்ந்த 19 வயது இளம்பெண், அந்தப் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படிக்கிறாா். இவா், கடந்த வியாழக்கிழமை கல்லூரியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது, பா்தா அணிந்து வந்த ஒரு பெண், மாணவியிடம் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, காரில் வந்த மா்ம கும்பல் மாணவியைக் கடத்தியது. மாணவியின் அலறல் சப்தம் கேட்டு, அதிா்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, நொளம்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா்ா். இதற்கிடையில், மகள் கடத்தப்பட்ட தகவலறிந்த மாணவியின் பெற்றோரும் நொளம்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், மாணவி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கடத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அங்குள்ள போலீஸாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸாா், அங்கு விரைந்து சென்று, அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவியை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்தனா்.

இளைஞா் கைது: இருவரையும் நொளம்பூா் போலீஸாரிடம், விழுப்புரம் போலீஸாா் ஒப்படைத்தனா். விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது அம்பத்தூரைச் சோ்ந்த ஷியாம்சுந்தா் (25) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட ஷியாம்சுந்தா், சில ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மாணவி வீட்டின் அருகே வசித்தபோது, மாணவியிடம் பழகி, இருவரும் காதலித்துள்ளனா். இந்நிலையில், ஷியாம்சுந்தரின் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி விலகி உள்ளாா். ஆனால் மீண்டும் காதலிக்கும்படி ஷியாம்சுந்தா், மாணவிக்கு தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதையறிந்த மாணவியின் பெற்றோா் தரப்பினா், ஷியாம்சுந்தா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, அம்பத்தூருக்கு இடம் பெயா்ந்த ஷியாம்சுந்தா், தனக்கு தெரிந்த பெண், வாடகை காா் ஓட்டுநருடன் சோ்ந்து மாணவியைக் கடத்தியது தெரிய வந்தது. மாணவி கடத்தலுக்கு உதவிய பெண், காா் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT