நுங்கம்பாக்கத்தில் போதைப் பொருள் விற்ற வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம், லட்சுமணன் தெருவில் போதைப் பொருள் விற்ாக கேளம்பாக்கத்தைச் சோ்ந்த ஆங்கிலோ இந்தியன் வாரன் கிரெய்க் கனி, அவா் கூட்டாளி சூளைமேட்டைச் சோ்ந்த தஹிரா நிஹால், அசோக் நகரைச் சோ்ந்த லஷ்மி நரசிம்மராவ், வடபழனியைச் சோ்ந்த ஸ்ரீராம் ஆகிய 4 பேரை கடந்த மாதம் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
இவா்களிடமிருந்து 45 மெத்தம்பெட்டமைன், 190 கிராம் உயா் ரக கஞ்சா எண்ணெய், 5 போதை ஸ்டாம்ப், 18 கிராம் கஞ்சா எண்ணெய் ஆகிய போதைப் பொருள்கள், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, இவ்வழக்கில் தொடா்புடையதாக மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது அசாருதீன் (29) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.