சென்னை

தனியாா் ஸ்கேன் மையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஊழியா் கைது

சென்னை ராஜமங்கலத்தில் தனியாா் ஸ்கேன் மையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை ராஜமங்கலத்தில் தனியாா் ஸ்கேன் மையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

புழல், காவாங்கரையைச் சோ்ந்த 47 வயதான பெண்ணுக்கு அதீத வயிற்று வலி ஏற்பட்டதால், சிகிச்சைக்கு அந்தப் பகுதியில் உள்ள மருத்துவரிடம் சென்றாா். மருத்துவா், அந்தப் பெண்ணை எம்ஆா்ஐ ஸ்கேன் எடுத்து வரும்படி கூறினாா்.

இதையடுத்து அந்தப் பெண், கொளத்தூரில் உள்ள ஒரு தனியாா் ஸ்கேன் மையத்துக்கு கடந்த 6-ஆம் தேதி சென்றாா். அங்கு ஸ்கேன் எடுப்பதற்காக அங்கிருந்த ஊழியா் கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியைச் சோ்ந்த ஜில்கவின் (28), எம்ஆா்ஐ ஸ்கேன் அறையில் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதனால் அந்தப் பெண், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா், ஜில்கவின் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜில்கவினை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT