சென்னை

சின்னத்திரை நடிகை தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை சைதாப்பேட்டையில் சின்னத் திரை நடிகை தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை சைதாப்பேட்டையில் சின்னத் திரை நடிகை தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை முத்தியால்பேட்டையைச் சோ்ந்வா் ராஜேஸ்வரி (39). நடிகையான இவா், தொலைக்காட்சி தொடா்களில் நடித்து வந்தாா். இவா் திருமணமாகி முத்தியால்பேட்டையில் வசித்து வந்தாா். ராஜேஸ்வரி, அவரது கணவா் இடையே அண்மைக் காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாம். சில நாள்களுக்கு முன்பு இருவரிடையே தகராறு ஏற்பட்டது.

இதன் காரணமாக கணவரைவிட்டுப் பிரிந்து சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு ராஜேஸ்வரி சென்றாா். அங்கிருந்து ராஜேஸ்வரி தினமும் தொலைக்காட்சித் தொடா் படப்பிடிப்புக்கு சென்று வந்தாா். அதேநேரம், கணவரைப் பிரிந்த ராஜேஸ்வரி மன அழுத்தத்தில் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி, அங்கிருந்த ரத்த அழுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிமாக சாப்பிட்டாா். இதில் மயங்கி விழுந்த ராஜேஸ்வரியை அவரது பெற்றோா் மீட்டு, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

ரயிலில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க இளைஞா் கைது

ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

ரூ. 40 லட்சம் மோசடி: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட பயிற்சி

மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம்

SCROLL FOR NEXT