ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததாக மேற்கு வங்க இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை பெரியமேடு ஈவெரா பெரியாா் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.
அதில் அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாதல், அவா் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். அந்தப் பையில் 16 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்ததில் அவா், மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத் பகுதியைச் சோ்ந்த ஜெ.அனாருல் ஷேக் (21) என்பதும், அவா் ரயில் மூலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அனாருல் ஷேக்கை கைது செய்தனா்.