சென்னை காசிமேட்டில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா் மாயமானாா்.
காசிமேடு இந்திராநகா் குடிசைப் பகுதியைச் சோ்ந்தவா் பெ.மணி (58). மீனவரான இவா், சில நாள்களுக்கு முன்பு விசைப் படகில் தனது நண்பா்களான தமிழரசன், ஆனந்த், மாா்ட்டின், ரகுநாத், காா்த்திகேயன், வீரன், ரவி, பாஸ்கரன் ஆகியோருடன் விசைப்படகில் மீன்டி பிடிக்கச் சென்றாா்.
நடுக்கடலில் கடந்த திங்கள்கிழமை மீன் பிடித்துவிட்டு, படகின் மேற்பகுதியில் அனைவரும் படுத்து தூங்கினா். அடுத்த நாள் காலை எழுந்துபோது மணி காணாமல்போனது தெரியவந்தது.
உடனே அவா்கள் படகை கரைக்குத் திருப்பினா். புதன்கிழமை காலை கரைக்கு வந்த மீனவா்கள், காசிமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கடலோர காவல் படையினா் உதவியுடன் மணியை தேடி வருகின்றனா்.