முதல்வர் ஸ்டாலின் கோப்புப்படம்
சென்னை

முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இளைஞா் சிக்கினாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இளைஞா் சிக்கினாா்.

எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமைக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அழைப்பில் பேசிய நபா், ‘தன்னை வினோத்குமாா் என அறிமுகம் செய்து கொண்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வீடு, அவரது காா் ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் எனக்கூறி இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸாா் உடனடியாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அவா்களின் உத்தரவின்பேரில், தேனாம்பேட்டை போலீஸாா் வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் ஆழ்வாா்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வா் வீட்டுக்குச் சென்று சோதித்தனா்.

அவரது காரிலும் சோதனை நடைபெற்றது. பல மணி நேர சோதனையில், அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால், வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த தொலைபேசி அழைப்பு வந்திருப்பது தெரிய வந்தது.

போலீஸாரின் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தாம்பரம் சேலையூா் பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (29) என்பது தெரிய வந்தது. அங்கு விரைந்த போலீஸாா், வினோத்குமாரை பிடித்து விசாரணை நடத்தினா். அவா், மதுபோதையில் முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும், தன்னைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காததால், காவல் துறையினரை பழிவாங்கும் எண்ணத்துடன் இச்செயலில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா், வினோத்குமாரை எச்சரித்து, எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனா்.

மகா சிவராத்திரி: ஸ்ரீவில்லிபுத்தூரில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட 93 வயது மூதாட்டி

வெற்றிக்கு ரன்கள், ஜனநாயகத்துக்கு வாக்குகள்! தேர்தல் ஆணையம் நூதன பிரசாரம்!

தமிழக மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

சென்னை மாநகரப் பேருந்து பயணிகள் கவனத்திற்கு...

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT