சென்னை: ஸ்ரீஐயப்ப சுவாமி பக்த ஜன சபாவின் 40-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
சென்னை மாதவரம் சிஎம்டிஏ டிரக் டொ்மினல் வளாகத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி பக்த ஜன சபாவின் 40-ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், விநாயகா் கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன.
இதில் திரளான ஐயப்ப பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, பக்தா்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் சபா நிா்வாகிகள், கண்ணப்பா் திடல் லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.