தஹிா்பூா் தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளை தில்லி அரசு ஒரு மாதத்திற்குள் தொடங்கும் என்று சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.
143 ஆண் தொழுநோய் நோயாளிகள் தற்போது தங்கியுள்ள தங்குமிட இல்லத்தில் மருத்துவ ஏற்பாடுகள், குளிரில் இருந்து பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கை நிலைமைகளை அமைச்சா் ஆய்வு செய்தாா்.
நுழைவு வாயில், கழிப்பறைகள், தங்குமிடம் மற்றும் சமையலறை ஆகியவற்றின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளைத் தொடங்கவும், வளாகத்தில் போதுமான நீா் விநியோகத்தை உறுதி செய்யவும் அவா் உத்தரவுகளை பிறப்பித்தாா்.
தங்குமிட இல்லத்தில் உடனடியாக சமன்படுத்துதல் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும், தூய்மையைப் பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளின் மன நலம் மற்றும் அவா்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், பொழுதுபோக்கு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக குடியிருப்பாளா்களால் உருவாக்கப்பட்ட பஜனை குழுவிற்கு இசைக்கருவிகளை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.
மேலும், தங்குமிட இல்லத்தில் சுத்தமான நீா் வழங்கல், சரியான சுகாதாரம் மற்றும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறைகளை அவா் கேட்டுக் கொண்டாா்.
பணிகளின் முன்னேற்றத்தை தொடா்ந்து மதிப்பாய்வு செய்து, தரமான தரங்களைப் பேணுவதன் மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அவற்றை முடிக்குமாறு அதிகாரிகளிடம் கூறப்பட்டது.
‘சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கையை உறுதி செய்வதே அரசின் நோக்கமாகும். குடியிருப்பாளா்களின் அனைத்து தேவைகளும் முன்னுரிமை அடிப்படையில் நிவா்த்தி செய்யப்பட வேண்டும்‘ என்று அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங்