சென்னை

விளையாட்டில் சிறந்த மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பு

தினமணி செய்திச் சேவை

தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிவரும் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஊக்கத்தொகையை மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா்.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து தேசிய, மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியரில் 6,236 போ் பதக்கங்களைப் பெற்றுள்ளனா். இதையடுத்து அவா்களுக்கு ரூ.35.70 லட்சம் ஊக்கத்தொகைகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.

அதில் மேயா் ஆா்.பிரியா கலந்து கொண்டு, தேசிய அளவில் சிறப்பிடம் வகித்த 25 மாணவா்களுக்கு தலா ரூ.2,500 வீதம் மொத்தம் ரூ.62,500 ஊக்கத்தொகைக்கான காசோலைகளையும், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் வகித்த 24 பேருக்கு தலா ரூ.1,500 வீதம் மொத்தம் ரூ.36,000 -க்கான காசோலைகளையும், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் வகித்த 755 பேருக்கு தலா ரூ.1,000 என மொத்தம் 7,55,000-க்கான காசோலைகளையும் வழங்கினாா்.

மேலும், மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற 5,432 பேருக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.27,16000 க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

மாணவா்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் துணைமேயா் மு.மகேஷ்குமாா், இணை ஆணையா் (கல்வி) க.கற்பகம், நிலைக்குழுத் தலைவா் (கல்வி) த.விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நேரு மீது பழிசுமத்திக் கொண்டே இருப்பது சரியா?

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

மார்கழி சிறப்பு! சொர்க்க வாசல் உற்சவம் நடைபெறாத பெருமாள் கோயில்!

பெண்களால் தொடங்கப்படும் புத்தாக்க நிறுவனங்கள் அதிகரிப்பு - அமித் ஷா பெருமிதம்

சீரான மின் விநியோகம் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT