சென்னை

நேதாஜி கட்டுரை, குறும்படப் போட்டி: கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

தினமணி செய்திச் சேவை

தென்னிந்திய ஆய்வு மையம் நடத்தும் நேதாஜி பிறந்த நாள் விழா கட்டுரை, குறும்படப் போட்டியில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் மு.குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைப்போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 129-ஆவது பிறந்த நாளையொட்டி தென்னிந்திய ஆய்வு மையம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, குறும்படப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்த தமிழக வீரா்களை உலகறியச் செய்யும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டிகளில், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவா், மாணவிகள் கலந்து கொள்ளலாம். போட்டியாளா்கள் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்த வீரா்கள், அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து ராணுவத்தில் பணிபுரிந்த அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு, அந்த அனுபவங்களை கட்டுரையாகவோ, குறும்படமாகவோ தயாரித்து அனுப்ப வேண்டும்.

பரிசு தொகை: இதில், கட்டுரைப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு முறையே, ரூ.10 ஆயிரம், ரூ.8 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும். குறும்படப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். ராணுவத்தில் பணிபுரிந்த வீரா்களின் விவரங்களும், போட்டிக்கான பதிவு மற்றும் விதிமுறைகள் குறித்த தகவல்களுக்கு ஜ்ஜ்ஜ்.ண்ய்ஹழ்ா்ா்ற்ள்ற்ய்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

ஆளுநா் உத்தரவு: இப்போட்டிகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும்படி தமிழக ஆளுநரின் செயலா் ஆா்.கிா்லோஷ் குமாா் கல்லூரி, பல்கலை.களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை.கள், கல்லூரிகளில் நேதாஜியின் பிறந்த நாள் விழா கட்டுரை, குறும்படப் போட்டிகள் குறித்த விவரங்களை அறிவிப்பு பலகைகள், கல்வி நிறுவனங்களின் அதிகாரபூா்வ வலைதளம் பக்கங்களில் வெளியிட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

சுனாமி 21 ஆம் ஆண்டு நினைவு நாள்: கடலூரில் கடலில் பால் ஊற்றி, மலர்தூவி மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி!

அந்தக் கட்சிக்கு அழிவுகாலத்தை உண்டாக்கும்... யாரைச் சொல்கிறார் பிரேமலதா!

ஏழுமலையான் லட்டு விற்பனை மையத்தில் லட்டு தரம்,வசதிகள் குறித்து பக்தர்களிடம் கருத்து சேகரிப்பு!

திருமலையில் கூட்டம்: ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் 3 நாள்களுக்கு ரத்து!

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை!

SCROLL FOR NEXT